Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்களே…. நெருங்குகிறது ஆபத்து?…. ஆய்வில் வெளிவந்த ஷாக் நியூஸ்….!!!!

ஸ்காட்லாந்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்காட்லாந்தில் விஞ்ஞானிகள் கொரோனா தொடர்பில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், ‘கொரோனா தொற்று ஏற்படும் கர்ப்பிணிகள்’ என்னும் தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் நாட்டில் சுமார் 4950 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது.

இதில், 77% கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணி பெண்களின் பிரசவத்தில் குழந்தைகள் இறப்பு விகிதமானது, ஆயிரத்திற்கு 23 என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. இதேபோல கொரோனா தொற்று ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 17% பேருக்கு பிரசவ காலத்திற்கு முன்பாகவே குழந்தை பிறந்திருக்கிறது. இவ்வாறான பாதிப்பு ஏற்பட்ட பெண்கள் அனைவருமே தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.

Categories

Tech |