Categories
தேசிய செய்திகள்

“தாயை காப்பாற்ற” மகள் தூக்கிட்டு தற்கொலை…. உபி-யில் சோகம்…!!

உபியில் தாயை சுட மறுத்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 உத்தரபிரதேசத்தில் லக்னோ பகுதியில் தந்தையும், மாமாவும் நாட்டுத் துப்பாக்கியால் பெற்ற தாயையும் உடன் பிறந்தவர்களையும் சுடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருடைய உடல் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அவரின் அறையில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை செய்வதற்கு முன் நான்கு பக்கம் கொண்ட கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அதில்,

நான் போலீசாக விரும்பினேன்.  ஆனால் தந்தையும் மாமாவும் என்னை உடல் மற்றும் மன ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். இதற்கு எனது தாய் தடையாக இருந்ததால் அவரை நாட்டுத் துப்பாக்கியால் சுடுமாறு வலியுறுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்.

எனது தந்தை எனது அம்மாவை திருமணம் செய்வதற்கு முன் அவரது முதல் மனைவியும் நான்கு குழந்தைகளையும் கொலை செய்துள்ளார். இதற்கு எனது மாமாவும் உடந்தை. இருவரும் இதற்காக சிறை தண்டனை ஏற்கனவே அனுபவித்துள்ளனர். என் இறப்புக்குப் பின் அவர்கள் இருவரும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அப்படி செய்தால் தான் எனது சாவிற்கு அர்த்தம் இருக்கும் என்று எழுதி வைத்திருந்தார்.இதையடுத்து  காவல்துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்ய, உறவினரான மாமாவை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |