உபியில் 19 வயது பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் தனது தாயாருடன் வயல் வேலைக்கு சென்றிருந்த போது, சில கொடூரர்கள் தனியாக வயலுக்குள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அவரது முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கு பாதி அறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர்,
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த சூழ்நிலையில், இறந்த பெண்ணின் உடலை திடீரென போலீசாரே மயானத்தில் வைத்து எரியூட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கியது.
பெண்ணின் மரணத்தின் மீதும் சந்தேகத்தை மேற்கொண்டு எழுப்பியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நடிகை கங்கனா ராணுவத்துக்கு அரசு வழங்கிய ஒய்பிளஸ்பாதுகாப்பு படத்தையும், உபி பெண் எரிக்கப்பட்ட படத்தையும் ஒப்பிட்டு இந்தியாவில் சாமானிய பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.