Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 7 மணி நேரம் கழித்து உயிர்பிழைத்த எலக்ட்ரீசியன்…. அதிர்ச்சியடைந்த மருத்துவமனை…. உத்திரபிரதேசத்தில் நடந்த சம்பவம்….!!

உத்திர பிரதேசத்தில் வசித்து வந்த 40 வயதாகும் எலக்ட்ரீசியனின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டார் என்று கூறி ஐஸ் பெட்டியில் வைத்துவிட்ட நிலையில் கிட்டத்தட்ட 7 மணி நேரம் கழித்து அவர் மீண்டும் உயிர் பிழைத்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் 40 வயதாகும் எலக்ட்ரீசியன் ஒருவர் வசித்து வந்துள்ளார் .இதனையடுத்து இவர் மீது பைக் மோதியதில் 40 வயதாகும் அந்த எலக்ட்ரீசியன் மிகவும் படுகாயமடைந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் 40 வயதாகும் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

ஆனால் மருத்துவர்கள் 40 வயதாகும் எலக்ட்ரீசியனை பரிசோதனை செய்துவிட்டு அவர் உயிரிழந்து விட்டதாக கூறி ஐஸ்பெட்டியில் வைத்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த 40 வயதாகும் எலக்ட்ரீசியனின் உறவினர்கள் அவரை ஐஸ் பெட்டியில் சென்று பார்த்தபோது அவருடைய உடல் அசைந்துள்ளது.

இதனையடுத்து கிட்டத்தட்ட 7 மணி நேரம் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட நபரொருவர் திடீரென உயிர் பிழைத்தது அந்த மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |