Categories
தேசிய செய்திகள்

தாலி கட்டும் நேரம்… “மணமேடையில் தங்கை செய்த செயல்”… ஆத்திரமடைந்த மணமகன்… திருமணத்தை நிறுத்திய மணமகள்..!!

உத்தரபிரதேசத்தில் மணமேடையில் மணமகன்  செய்த காரியத்தால் திருமணம் வேண்டாம் என்று மணப்பெண் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள்  கோலாகலமாக நடைபெற்றது.

மறுநாள் (திருமணநாளன்று) காலை மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு ரெடியாகி மணமேடையில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மணமகனின் தங்கை மிகவும் மகிழ்ச்சியாக பாடல் ஒன்றிக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த மணமகன் (அண்ணன்) கடும் கோபமடைந்து அருகில் இருந்த ஒரு  நாற்காலியை எடுத்து தங்கையை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணப்பெண், இவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி மணமேடையிலேயே மாலையை தூக்கி போட்டுவிட்டு எழுந்து சென்றுள்ளார். அதன்பின்  உறவினர்கள் மணப்பெண்ணை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.

ஆனால், அவரோ முடிவில் இருந்து மாறாமல், ஒரு கடும் கோபக்காரருடன் தன்னால் வாழ முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார்.. சகோதரியையே அவர் இப்படி அடிக்கிறார்.. நாளை தன்னிடமும் இதுபோன்று தான் நடந்துகொள்வார். பெண்களை மதிக்காத இவரிடம்  தன்னால் வாழ முடியாது என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின் போது மணமகன் குடிபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

Categories

Tech |