வருகிற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா என்று கேள்விக்கு மு க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு போன்றவை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திமுகவில் அரசியல் களத்தில் திடீரென்று உதயநிதி ஸ்டாலின் இறங்கியுள்ளார். மேலும் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஸ்டாலின் போட்டியிடுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் திமுகவின் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே அப்படித்தான் கட்சியில் வாய்ப்பை பெற்றேன். திமுகவை குறை சொல்பவர்கள், குடும்ப அரசியல் காரணமாக உதயநிதிக்கு முன்னுரிமை என்று சொல்லி வருகின்றனர் என பதிலளித்தார். உதயநிதி ஸ்டாலினும் தற்போது ஒவ்வொரு பகுதியாக நேரடியாக சென்று தேர்தல் வேலைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.