நந்தா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ‘கிரீடம்’, ‘நான் மகான் அல்ல’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்தவர் வினோத் கிஷன். தற்போது இவர் இயக்குநர் ரமேஷ் ஜி இயக்கும் அடவி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார்.
ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் கே.சாம்பசிவம் தயாரிக்கும் இப்படத்திற்கு சரத் ஜடா இசையமைக்கிறார். இயக்குநர் ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் டீஸர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியிருந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
Upcoming movie #Adavi trailer
Do watch and support 🙏@PicturesShri https://t.co/wbXeRYWyZ6 pic.twitter.com/eZpcfLNog4— vinoth kishan (@vinoth_kishan) December 25, 2019