வணிக வளாக கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலமாசி வீதியில் பழமையான வணிக கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் வணிக கட்டிட சுவர் மோசமான நிலையில் இருந்ததால் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து இதில் சிக்கி மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மராமத்து பணிகளின் போது கட்டிட சுவர் விழுந்து விழுந்ததில் சந்திரன், ராமன், ஜெயராமன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து விரைந்து வந்த மீட்பு படையினர் இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள இரண்டு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.