Categories
சினிமா தமிழ் சினிமா

”பொன்னியின் செல்வன்”படத்தின் அப்டேட்…. இணையத்தில் திரிஷா பகிர்ந்த தகவல்….!!

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக டப்பிங் பேசி வரும் புகைப்படத்தை திரிஷா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

திரிஷா பகிர்ந்த புகைப்படம்

இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், இந்தப் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை நடிகை திரிஷா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாகவும், தற்போது அவர் டப்பிங் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், டப்பிங் ஸ்டூடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |