கூகுள் பே, பேடிஎம், பிஹெச்ஐஎம் உள்ளிட்ட யுபிஐ பணபரிமாற்ற வழிகளை கையாளும் ஒரு சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
பெரும்பாலான மக்கள் தற்போது கையில் பணம் எடுத்துச் செல்வதைக் காட்டிலும் கூகுள் பே, பேடிஎம் போன்ற பணபரிமாற்றம் வழிகளை செய்து வருகின்றன. ஷாப்பிங், உணவகங்கள் ஏன் டீக்கடைகளில் கூட கூகுள் பே பயன்படுத்தும் நிலைதான் தற்போது உள்ளது. ஆனால் இந்த பணபரிமாற்றம் வழிகளை கையாளும் பொழுது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு பணம் செலுத்தும் முன் மொபைல் எண், யுபிஐ ஐடியை செக் செய்துகொள்ளவேண்டும்.
தவறான எண்களுக்கு அனுப்பும்போது தகவல் திருட்டு நிகழ வாய்ப்பு உள்ளது. எக்காரணம் கொண்டும் எவருக்கும் கடவுசொல்களை பகிர கூடாது. போலி செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. சைபர் கிரைம் மோசடியாளர்கள் கைவரிசை காட்ட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் ஆன்லைன் பண பரிமாற்றம் செய்யும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.