Categories
தேசிய செய்திகள் பல்சுவை

UPI பணபரிவர்த்தனை செய்பவர்கள் கவனத்திற்கு….. இந்த 5 மட்டும் எப்போதும் மனசுல வசிக்கோங்க…. உங்க பணத்துக்கு ஆபத்து No…!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் செய்வதை அனைவருமே தொடங்கிவிட்டனர். இருப்பினும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் பொழுது மோசடிகளும் அரங்கேறி வருகிறது. எனவே பண பரிவர்த்தனை செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தும் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை அனைத்துமே யு பி ஐ பயன்படுத்தி தான் இயங்கி வருகின்றன. யுபிஎஸ் சேவை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுடைய டிவைஸ்களை ஹேக் செய்து மோசடியாளர்கள் எப்படியாவது பணத்தை திருடி வருகிறார்கள்.

இது போன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என்றால் கட்டாயம் நாம் ஐந்து முக்கியமான பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது யாரிடமும் வாடிக்கையாளர் தங்களுடைய யுபிஐ நம்பரை பகிர்ந்து கொள்ள கூடாது. ஒவ்வொரு பரிவர்த்தனை போதும் பின் நம்பரை குறிப்பிடும்படி பயனளாரருக்கு யு பிஐ ஆப்கள் சுட்டிக்காட்டும். எனவே ஏடிஎம் மையத்தை போல யுபிஐ பின் நம்பரை செட் செய்த பிறகு நாம் அதை பயன்படுத்த முடியும். இந்த பின் நம்பரை நாம் ரகசியமாக பாதுகாக்க வேண்டும்.

அதேபோன்று இரண்டாவதாக ஃபோனில் ஸ்கிரீன் லாக் செட் செய்ய வேண்டும். அப்படியே இல்லாவிட்டாலும் யுபிஐ பயன்படுத்துவராக இருந்தால் ஸ்கிரீனில் லாக் செட் செய்யும்படி அதுவே உங்களுக்கு நினைவூட்டும். உங்களுடைய போன் தொலைந்து விட்டாலும் அல்லது திருடப்பட்டாலும் அதை வைத்து மோசடி செய்வதற்கு வாய்ப்புகள் தடுக்கும் அம்சமாக இந்த ஸ்கிரீன் லாக் இருக்கும். அதேபோன்று மூன்றாவதாக எதிர்முனையில் உள்ள நம்பரின் யுபிஐ ஐடி க்கு நாம் பணம் செலுத்தும் போது அதேபோன்று உங்களுடைய யுபிஐ பயன்படுத்தி பிறரிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ளும் பொழுது யூபி ஐடியை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இது தவறான பரிவர்த்தனையை தடுக்க உதவும். ஒன்றுக்கும் மேற்பட்ட யு பிஐ ஆப்களை பயன்படுத்த வேண்டாம். இதனால் தனி சிறப்பு மிக்க பலன் எதுவும் கிடையாது. ஆனால் இது உங்களுடைய மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி தவறான பரிவர்த்தனைக்கு வழிவகை செய்து விடும். கடைசியாக உங்களுடைய செல்போன் நம்பருக்கு வாட்ஸ்அப் மெசேஜ் இமெயில் போன்ற லிங்க் ஏதாவது வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் அதேபோன்று உங்களுடைய பின் நம்பர் ஓடிபி கட்டாயம் யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.

Categories

Tech |