Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உப்பளத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உப்பள தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அனைவரும் இரவு தூங்கச் சென்றனர்.

இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது நாகராஜ் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயராணி இதுகுறித்து முத்தையாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாகராஜின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |