Categories
அரசியல்

தீபாவளிக்கு உப்பு சீடை செஞ்சு அசத்துங்க…. ரெசிபி இதோ உங்களுக்காக….!!!!

உப்பு சீடை செய்ய தேவையான பொருள்:

பச்சரிசி – 1 கப்

உளுந்து மாவு – 2 மேஜைக்கரண்டி

கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு – 1 மேஜைக்கரண்டி

வெண்ணெய், இளகியது – 3 மேஜைக்கரண்டி

எள் – 2 தேக்கரண்டி

பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி

துருவிய தேங்காய் – 3 மேஜைக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

அரிசியை களைந்து 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தண்ணீரை வடித்து, ஒரு சுத்தமான வெள்ளை காட்டன் துணியில் பரப்பி 15 நிமிடம் வைக்க வேண்டும். மிக்சியில் நைஸான மாவாக அரைக்கவும். சல்லடையில் சலிக்க வேண்டும். கடாயில் மிதமான தீயில் மாவை வறுக்கவும். நன்கு ஆவி வரும் வரை வறுக்க வேண்டும். ஆனால் நிறம்  மாறக்கூடாது. உளுந்தை பொன்னிறமாக மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

பின்பு அதனை ஆறவைத்து நன்கு நைஸாக அரைத்து, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். லேசாக உளுந்து மாவையும் சூடு செய்து, அரிசி மாவுடன் சேர்க்க வேண்டும். துருவிய தேங்காயை ஈரம் போகும் வரை வறுக்க வேண்டும். வெண்ணெய், எள், பெருங்காயம், தேங்காய், உப்பு, கடலை மாவு/ பொட்டுக்கடலை மாவு எல்லாவற்றையும் சேர்த்து, நன்கு கலக்க வேண்டும். தண்ணீர் தெளித்து, மாவாக பிசைய வேண்டும். சற்று பொல பொலவென இருப்பது அவசியம்.

சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். இதனையடுத்து எண்ணெய் காயவைத்து கொள்ள வேண்டும். 2-3 பாகங்களாக உருட்டிய சீடைகளை பிரித்து பொரிக்கவும். சீடை போடும் பொழுது, எண்ணெய் சூடாக இருக்க வேண்டும். பிறகு, மிதமான தீயில் வைத்து, பாதி வெந்தவுடன் நன்கு கலந்து, மீண்டும் மிதமான தீயிலே வேக வைக்க வேண்டும். சத்தம் அடங்கி, லேசாகவும், பொன்னிறமாகவும் ஆகும் வரை பொரிக்க வேண்டும். இப்போது சுவையான சீடை தயார்.

Categories

Tech |