Categories
தேசிய செய்திகள்

UPSC புது தலைவர் பா.ஜ.க.வுக்கு நெருக்கமானவர்…. காங்கிரஸ் தலைவர் குற்றசாட்டு…..!!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தலைவரை நியமித்தது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். யுபிஎஸ்சி புது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் சோனி, ராஷ்திரிய ஸ்வயம் சேவா சங்க் மற்றும் பா.ஜனதா கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என ஊடகங்களில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை வாயிலாக நாட்டின் அரசியலமைப்பு தகர்க்கப்படுகிறது என கூறியுள்ளார். இதில் டுவிட்டரில் ராகுல் காந்தி கூறியதாவது, “யுபிஎஸ்சி என்பது யூனியன் பிரசாரக் சங்க கமிஷன் ஆகும்.

இதனிடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தகர்க்கப்படுகிறது, ஒவ்வொரு நேரத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு அமைப்பாக தகர்க்கப்படுகிறது என்று பொருள்படுமாறு’ என பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பாக இந்த மாதம் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி கூறியதாவது, “அரசியலமைப்பு ஒரு ஆயுதம் ஆகும். எனினும் அமைப்புகள் இல்லாமல் அது அர்த்தமற்றது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |