UPSC தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப தேர்வெழுதும் இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . இதையடுத்து அரசு பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்தும் சமீபகாலங்களில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட படிப்படியாக சில போட்டித் தேர்வுகளுக்கான நடைபெறும் தேதிகளும் அவ்வப்போது கணிப்பில் அறிவிக்கப்பட யுபிஎஸ்சி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி தேர்வு நடைபெற இருக்கிறது. எனவே தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் ஜூலை 7 இல் இருந்து ஜூலை 13 வரையிலும், ஜூலை 20 இல் இருந்து 24 தேதி வரையிலும் upsconline.nic.in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு எழுதும் மையத்தை மாற்றிக் கொள்ளலாம் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.