Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுகள் வெளியீடு…!!

அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் 19 நாட்களில் யுபிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 796 காலி பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். கொரோனா நோய்த் தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 4ம் தேதி நடந்தது.

நாடு முழுவதும் 72 நகரங்களில் 2,569 மையங்களில் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினார்கள். இந்நிலையில் அக்டோபர் 4ம் தேதி நடந்த சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி நிர்வாகம் வெளியீட்டு உள்ளது.

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு  ஜனவரி எட்டாம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதல் முறையாக தேர்வு நடைபெற்று 19 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டது தேர்வு எழுதிய மாணவ மாணவியரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |