Categories
சினிமா தமிழ் சினிமா

“ஊர் வாயை மூட முடியாது”…. கவிஞர் வைரமுத்து பற்றி பரவிய கடும் சர்ச்சைகளுக்கு வி.ஜே அர்ச்சனா பதிலடி….!!!

பிரபல சீரியல் நடிகை அர்ச்சனா அண்மையில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதற்கு பாடகி சின்மயி கடும் விமர்சனம் செய்திருந்தார். வைரமுத்துவை பார்க்கும் போது தனியாக செல்லாதீர்கள் யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் தீயாக பரவிய நிலையில், இது குறித்து நடிகை அர்ச்சனா எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் நடிகை அர்ச்சனா பேட்டி ஒன்றில் வைரமுத்துவை சந்தித்தது தொடர்பாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தை ஒரு தமிழ் பேராசிரியர் என்பதால் எங்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.  அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவின் சினிமா பாடல்களை தான் எங்கள் வீட்டில் அனைவரும் கேட்பார்கள். நானும் கவிஞர் வைரமுத்துவுக்கு மிகப்பெரிய ரசிகை.

நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது வைரமுத்துவை திடீரென சந்தித்ததால் நான் அவரிடம் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை என்று கூறினேன். உடனே அவரும் எனக்கு ஆசீர்வாதம் கொடுத்தார். அவ்வளவு தான் நடந்தது. ஏதாவது ஒரு விஷயம் நடக்கும் போது பேச தான் செய்வார்கள். ஊர் வாயை நம்மால் மூட முடியாது. இது ஒரு ரசிகையின் சந்திப்பு அவ்வளவுதான் என்று கூறினார். மேலும் நடிகை அர்ச்சனாவின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |