மராட்டியத்தில் ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் பாதிப்பில் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதால் அப்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மாவட்டங்கள் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பயணத்திற்கு கூட தடை விதித்துள்ளது. இந்நிலையில் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி மாநிலங்கள் அளவில் பின்பற்றப்படும் ஊரடங்கு கடைசி வாய்ப்பாக தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து கேள்வி எழுப்பிய சிவசேனா கட்சியினர் எந்த வகையில் ஊரடங்கு வேண்டியதில்லை என்று மோடி கூறியிருக்கிறார். தற்போது மாநிலங்களுக்கு குறைந்தது 15 நாட்களாவது முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று மராட்டிய மந்திரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த கொரோனா பாதுகாப்பு குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முடிவு எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் நிலைமை மருத்துவர்களின் கை மீறி சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஆகையால் குஜராத்தில் 2 வார போராட்டங்கள் கட்டாயமாக அமுல்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மராட்டியத்தில் ஊரடங்கு அமல் தொடங்கிய பிறகும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.