Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு விதிகளை மீறி …. திறந்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர் …!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நகரில்  ஊரடங்கு விதியை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா  வைரஸ் இரண்டாம் அலை  வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் முழு ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பகல் 12 மணி வரை மட்டும் அத்தியாவசியப்  பொருள் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி ஆணையர் டி.ராஜவிஜயகாமராஜ், மற்றும் வருவாய் ஆய்வாளரான  மோகன் ,இவர்களுடன் கிராம நிர்வாக அலுவலர்களான  ஜெயச்சந்திரன், சிவகுமார், வருவாய் ஆய்வாளரான  வேலுமணி இருந்தனர் .

இவர்களோடு  நகராட்சி ஊழியர்கள், போலீசார் ஆகிய  அனைவரும் அடங்கிய குழு, ஆரணி நகரில் ஊரடங்கு  விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா , என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விதியை மீறி மண்டி தெரு பகுதியில் ஜவுளிக்கடைகள் தையல் கடைகள் மற்றும் டீ கடைகள் ஆகியவை சமூக இடைவெளி பின்பற்றாமல் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதைத்தொடர்ந்து  அரிசி வியாபாரம் செய்து வந்த கிடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மளிகை  கடைகளுக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Categories

Tech |