Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு மீறல் – ரூ.20.53 கோடி அபராதம் வசூல்

கொரோனா ஊரடங்கு மீறியதாக தமிழகம் முழுவதும் 20 கோடியே 53 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 106 நாட்களில் தடையை மீறியதாக 9 லட்சத்து 66 ஆயிரத்து 998 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஊரடங்கை மீறியதாக 8,75,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 6,80,247 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதமாக 20,53,51,588 ரூபாய் வசூலிக்க பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |