சேலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வட மாநிலங்களுக்கு தேங்காய்கள் அனுப்பப்படாமல் மண்டிகளில் தேங்கியுள்ளன.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வாழப்பாடி, குப்பனுர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தேங்காய் மண்டிகள் இயங்கி வருகின்றன. சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் உள்ள தென்னை மரங்களில் இருந்து பறிக்கப்படும் தேங்காய், இந்த மண்டிகளுக்கு கொண்டுவரப்பட்டு, நார் உரித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கலை இழந்து இருப்பதால் தேங்காய்கள் மண்டிகளிலே தேக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி தேங்காய் மண்டி உரிமையாளர்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.