Categories
அரசியல்

ஊரடங்கு மீறல் – ரூ.19.08 கோடி அபராதம் வசூல் …..!!!!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 19 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறியவர்களிடம் அபராதம் வசூலித்தல், சிறை தண்டனை மற்றும் வாகன பறிமுதல் என காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர். அவ்வகையில் கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 126 நாட்களில் 9 லட்சத்து 16 ஆயிரத்து 171 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். 8 லட்சத்து 32 ஆயிரத்து 541 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 லட்சத்து 56 ஆயிரத்து 563 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் 19 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரத்து 361 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |