Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் அளித்த வேலை… சிறுமிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்ற சிறுமி தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழுவூர் பகுதியில் பிச்சை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ராதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி உறவினர்களுடன் இணைந்து தனது ஆடுகளை அப்பகுதியில் மேய்க்கச் செல்வது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் ராதா ஆடுகளை மேய்க்கச் சென்ற போது அப்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து அவரது உறவினர் தண்ணீரை எடுத்து வரும்படி கூறியுள்ளனர். இதனால் ராதா தண்ணீர் எடுப்பதற்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றிற்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் ராதா சென்று வெகு நேரமாகியும் திரும்பி வராததால் உடனடியாக கிணற்று பகுதிக்கு சென்றனர். அப்போது ராதா கிணற்றுக்குள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |