Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்றபோது …. மனைவி கண் முன்னே கணவருக்கு நடந்த கொடூரம் …. மயிலாடுதுறையில் பரபரப்பு ….!!!

மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் மனைவி கண் முன்னே கணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் எலந்தங்குடியில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஆடுதுறைக்கு முகமது ரபீக்கும்  அவரது மனைவி அபாரத் நிஷாவும் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மயிலாடுதுறை கண்ணாரதெரு முக்கூட்டு பகுதி வழியே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் கணவன் – மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பேருந்தின் சக்கரம் கீழே விழுந்த முகமது ரபீக் தலையில் ஏறியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மனைவி அராபத் நிஷா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார் .இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல்துறையினர் இறந்து முகமது ரபீக் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுனர் கார்த்திகேயன் என்பவரை கைது செய்துள்ளனர் .இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

Categories

Tech |