Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ராதாநல்லூர் பகுதியில் தொழிலாளியான பாஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெஞ்சுவலி காரணமாக குடவாசல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பாஸ்டினுக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவரை உறவினர்கள் குடவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பாஸ்டினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்கிருந்த உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக குற்றம் சாட்டினர். இந்நிலையில் பாஸ்டினின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பாஸ்டின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை தரும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை தர முடியாது என்று கூறினர். இதனால் பாஸ்டின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கும்பகோணம்-திருவாரூர் சாலையில் பாஸ்டின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்சை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனால் திருவாரூர்- நன்னிலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |