Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உறவினர்களிடையே தகராறு…. வாலிபர் அடித்துக்கொலை…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூர் பகுதியில் முத்தாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அடக்கி என்ற மனைவி இருக்கின்றார். மேலும் முத்தாண்டி சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நடேசன் என்பவர் தனது பெரியம்மா அடக்கிக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இதனையறிந்த அடக்கியின் தங்கை மகன்களான முருகன், சுப்பிரமணியன் ஆகியோர் அடக்கியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட நடேசனை முருகன், சுப்பிரமணியன் ஆகியோர் கடப்பாறையால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து நடேசனின் மனைவி பஞ்சவர்ணம் புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன், சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |