Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏன் இந்த வழியில் போகிறாய்” உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம்…. போலீஸ் நடவடிக்கை….!!

உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையால் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய முகநூல் பாறை வட்டம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெரியப்பா கோவிந்தசாமி, சித்தப்பா முத்து ஆகிய 3 குடும்பத்தினருக்கு பொதுவான 10 அடி வழி இருக்கின்றது.

இதனால் நாகராஜ் பொது வழியில் நடந்து சென்ற போது தங்கம் என்பவரின் மகன்கள் மணிகண்டன் மற்றும் முருகன், முத்துவின் மனைவி இந்திராணி கோவிந்தசாமி மகன் பூபதி ஆகியோர் நாகராஜை இந்த வழியில் ஏன் போகிறாய் என கூறி தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கோபமடைந்த முருகன், இந்திராணி, பூபதி மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேரும் சேர்ந்து மரக்கட்டையால் நாகராஜை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகன், பூபதி மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |