ஏடிஎம் கார்டை திருடி பணம் எடுத்த இளம்பெண் மற்றும் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் கில்டா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரின் வீட்டிற்கு அதே பகுதியில் வசிக்கும் உறவினர் பெண்ணான ஜெனிலா என்பவர் அடிக்கடி செல்வது வழக்கம். அவ்வாறு ஜெனிலா கில்டாவின் வீட்டிற்குச் சென்று அவரின் ஏ.டி.எம். கார்டை திருடிக்கொண்டு தனது நண்பரான அஸ்வந்திடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜெனிலா மற்றும் அஸ்வந்த் ஆகிய இரண்டு பேரும் இணைந்து கில்டாவின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி 17,000 ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர். இதனையடுத்து கில்டாவின் செல்போனிற்கு பணம் எடுத்ததாக செய்தி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கில்டா உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கில்டாவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை திருடிய குற்றத்திற்காக ஜெனிலா மற்றும் அஸ்வந்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.