கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரென்ச் நாட்டின் அதிபரை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக சித்தரித்த நபரை குற்றவாளி என தீர்ப்பளித்த பிரெஞ்ச் நாட்டின் நீதிமன்றம் அவருக்கு சுமார் 10,000 யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது.
பிரெஞ்ச் நாட்டின் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க சில கட்டுப்பாடுகளை அங்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 62 வயதாகும் முன்னாள் விளம்பர நிர்வாகி ஒருவர் ஜனாதிபதி இம்மானுவேலை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக சித்தரித்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றம் பிரெஞ்சு அதிபரை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக சித்தரித்த 62 வயதாகும் முன்னால் விளம்பர நிர்வாகி ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி அவர் செய்த குற்றத்திற்கு தண்டனையாக சுமார் 10,000 யூரோக்களை அபராதமாகவும் விதித்துள்ளது. இது குறித்து 62 வயதாகும் முன்னாள் விளம்பர நிர்வாகி கூறியதாவது, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் கேலிச்சித்திரத்திற்கான உரிமை புதைக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.