காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் வசிக்கும் வியாபாரி தினேஷ் என்பவர் நேதாஜி நகர் வழியாக காரில் சென்றுள்ளார்.
அப்போது பறக்கும் படை அதிகாரிகள் அவர் காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி 63,400 ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.