Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. அதிகாரியிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 99 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கல்லரப்பட்டி பகுதியில் பறக்கும் படை அலுவலர் தேவகுமார் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பிரபு என்பவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர் முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி 99 ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |