உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் விநியோகம் செய்யப்படுகிறதா என கண்காணிக்க பறக்கும் படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி கச்சேரி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொக்காராம் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தேர்தல் நடத்தும் அலுவலரான ஸ்டேன்லி பாபுவிடம் ஒப்படைத்துள்ளனர்.