உருமாறிய கொரோனா வைரஸானது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை சீனா அரசு எடுத்து வருகிறது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரத்தில் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து வைரஸானது உருமாறி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் மறுபடியும் உருமாறிய டெல்டா வகை வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த திங்கட்கிழமை அன்று உகான் மாகாணத்தில் புலம்பெயர்ந்த ஏழு தொழிலாளர்களிடையே வைரஸ் தொற்றானது உறுதி செய்யப்பட்ட நிலையில் நகரின் அனைத்து பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகளில் சீன அரசு ஈடுபட்டு வருகிறது.
இதே போன்று நான்ஜிங்கில் உள்ள விமான நிலையத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸானது 12க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவி வருகின்றது. இந்த உருமாறிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 60 ஆக அதிகரித்த நிலையில் அங்குள்ள குடியிருப்புகளில் பரிசோதனை மேற்கொள்ள சீனா அரசு முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து நான்ஜிங்கிற்கு கிழக்கேவுள்ள யாங்சோவில் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நாளொன்றுக்கு குடும்பத்தில் ஒருவர் வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.