Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைக்கு உருண்டை ரசம் செய்து அசத்துங்க …

உருண்டை ரசம்

தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு –  1/2  கப்

கடலைப்பருப்பு  – 1/4  கப்

புளித் தண்ணீர் –  2 கப்

மஞ்சள்தூள் –  1/2  டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி –  சிறிதளவு

கடுகு –  1/4 ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:

உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்

மிளகு –  1   டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் –  3

பெருங்காயத்தூள் – 1/2  டீஸ்பூன்

urundai rasamக்கான பட முடிவுகள்

செய்முறை:

முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து, அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனை ஆவியில் வேகவைத்து  உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும் . வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை  வறுத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீருடன் மஞ்சள்தூள் சேர்த்து, கொதிக்கவிடவும். இதனுடன் வறுத்து அரைத்த விழுது , உப்பு மற்றும்  பருப்பு உருண்டைகள் சேர்த்து  2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கினால் சுவையான உருண்டை ரசம் தயார் !!!

Categories

Tech |