Categories
சினிமா தமிழ் சினிமா

உருண்டு உருண்டு விளையாடும் போட்டியாளர்கள்… முடிவை சொல்லும் மூன்றாவது அம்பயர்… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் ஏழாவது சுற்று நடைபெறுகிறது . அதில் போட்டியாளர்கள் உருண்டு உருண்டு ஒரு வளையத்தில் இருந்து பந்துகளை எடுத்து மற்றொரு வளையத்துக்குள் போடவேண்டும் . அந்த வளையத்தில் போட்ட அனைத்து பந்துகளையும் மீண்டும் முதல் வளையத்திற்குள் உருண்டு உருண்டு சென்று போட வேண்டும் ‌.

போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கை மிகத் தீவிரமாக விளையாடி வருகிறார்கள் ‌ . இறுதியில் சோம் ,கேபி இருவரும் ஒரே நேரத்தில் டாஸ்கை நிறைவு செய்கின்றனர். பின்னர் பிக்பாஸ் ‘முடிவுகளை 3வது அம்பயர் செக் பண்ணிக்கிட்டு இருக்கார்’ என கூறுவது போல் புரோமோ நிறைவடைகிறது . இவர்களில் யார் வெற்றி பெறுகிறார்கள் ?என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

Categories

Tech |