Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஏலம்…. இளைஞர்கள் எதிர்ப்பு…. வைரலாகும் வீடியோ….!!

கிராமத்தில் பதவிக்காக ஏலம் நடத்தியதை இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 6-ஆம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில் இருக்கும் 3 வார்டின் உறுப்பினர் பதவிகளுக்கு 2௦-க்கும் அதிகமானவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதன்பின் மூன்று ஊராட்சி வார்டுகளின் உறுப்பினர் பதவிக்கான ஏலம் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வார்டின் உறுப்பினர் பதவியை ஏலம் விடுவதற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிலர் ஏலம் நடைபெற்ற நிகழ்வை செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |