அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின்பும் ஆப்கன் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று ஜெர்மன் தூதர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டைவிட்டு அமெரிக்கப் படைகள் வருகின்ற 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டிலிருக்கும் வெளிநாட்டவர்களும், ஆப்கானியர்களும் அமெரிக்க படைகளின் மூலம் பிற நாடுகளுக்கு விமானத்தின் மூலம் தப்பிச் செல்கிறார்கள்.
இந்நிலையில் ஜெர்மன் தூதர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின்பும் அந்நாட்டைவிட்டு வெளியேற நினைக்கும் பொதுமக்கள் தாராளமாக பிற நாடுகளுக்கு செல்லலாம் என்று தலிபான்கள் பேச்சுவார்த்தையின் மூலம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்ல நினைக்கும் ஆப்கானியர்கள் கட்டாயமாக முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.