கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுமக்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆலப்புழா என்ற இடத்தில் நடந்த இந்த மோதலில் ஆண்களும், பெண்களும், ஒருவரை ஒருவர் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் பலரது மண்டை உடைத்தது பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல் பாதை பிரச்சினையால் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு பாதையை பயன்படுத்த ஊர் பஞ்சாயத்து அனுமதி அளித்த நிலையில் அந்த பாதையை ஒரு பிரிவினர் அடைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மோதல் கைகலப்பில் முடிந்ததை தொடர்ந்து சினிமாவையே மிஞ்சும் அடிதடி காட்சிகள் அரங்கேறின இந்த மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.