அமெரிக்க அரசு, ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதோடு, அதற்கு உதவும் சீனாவும் விளைவுகளை சந்திக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளரான நெட் பிரைஸ் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிப்படையும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் சீனா, ரஷ்யாவிற்கு உதவும் வகையில் அந்நாட்டுடன் சேர்ந்து, உக்ரைன் மீது போர் தொடுத்தால், அந்நாடும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்திருக்கிறார்.