இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (US Defence Security Cooperation Agency) செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.அதில் இந்தியக் கடற்படைக்கு பயன்படுத்தக்கூடிய எம்.கே – 45, 5 இன்ச்/62 காலிபர் (எம்ஓடி 4) நவீனத் துப்பாக்கிகளை, நம் நாட்டு அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துடன் மூன்றாயிரத்து 500 டி 349 5″/54 எம்.கே – 92 (எம்ஓடி 4) தோட்டாக்கள், துப்பாக்கி சார்ந்த தொழில் நுட்பட தரவுகள், துப்பாக்கியை பயன்படுத்தத் தேவைப்படும் பயிற்சி குறித்த கோப்புகள் மற்றும் துப்பாக்கியின் இதரப் பாகங்கள் சேர்த்து அனுப்பிவைக்கப்படும்’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 1 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள 13 எம்.கே ரகத் துப்பாக்கிகளை இந்தியா அமெரிக்காவிடம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.எம்.கே – 45 துப்பாக்கி வரும் நவம்பர் 19ஆம் தேதி இந்தியா வந்தடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் சென்று திரும்பிய கொஞ்ச நாட்களிலேயே இந்த அறிவிப்பு வருவது குறிப்பிடத்தக்கது.