Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவில் அமெரிக்க படைகள் அதிகரிக்கப்படும்…. அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு…!!!

ஐரோப்பாவில் இருக்கும் அமெரிக்கப்படை அதிகரிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன்  கூறியிருக்கிறார்.

ஸ்பெயின் நாட்டில் இருக்கும் மாட்ரிட் என்னும் நகரில் நேட்டோ உச்சி மாநாடானது நேற்று ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி ஜோ பைடன் நேட்டோவின் பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை சந்தித்து பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, நேட்டோப்படை பலமானது மற்றும் ஒற்றுமையானது. இந்த உச்சி மாநாட்டின் போது நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலமாக எங்களின் ஒற்றுமைக்கான பலத்தை மேலும் வலுப்படுத்த உள்ளோம்.

இதுமட்டுமல்லாமல் போலந்து நாட்டில் நிரந்தரமான ஒரு தலைமையகத்தை அமெரிக்கா அமைக்கவிருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் எப்-35 வகை போர் விமானப்படைகளை அனுப்பி  அனைத்து கிழக்கு பகுதிகளிலும் அமெரிக்க-நேட்டோ அமைப்பினை பலப்படுத்த இருப்பதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |