ரஷ்யாவிற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர், உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படும் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். ரஷ்யாவின் உயரதிகாரிகள், இம்ரான்கானை வரவேற்றார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் இதுபற்றி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின்மீது ரஷ்யா படையெடுத்திருப்பது குறித்த எங்களின் நிலைப்பாட்டை பாகிஸ்தானிற்கு தெரியப்படுத்திவிட்டோம்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடவடிக்கை மேற்கொள்வதை எதிர்ப்பது பொறுப்புமிக்க ஒவ்வொரு நாட்டினுடைய கடமை. உக்ரைன் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இம்ரான் கான் ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்க்க வென்றும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.