அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் போர் நீடித்து வரும் நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா மீண்டும் வரியை உயர்த்தி இருக்கிறது.
சமீபத்தில் பொருளாதாரத்தில் அமெரிக்காவை மிஞ்சும் அளவிற்கு சீன வளர்ச்சி அடைந்தது. இதையடுத்து சீன அமெரிக்கா இடையே ஏற்பட்டது. இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 25 சதவீதம் வரி விதித்துள்ளது.
இந்நிலையில் மேலும் 30 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கும் செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா சீனா வர்த்தக போர் குறித்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்வரை அமெரிக்கா வரியை அதிகரித்து கொண்டே இருக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த அவர், வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவர சீன அதிபர் ஜீஜின்பிங் காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் போரை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பு அதிகாரிகளும் கடந்த ஜூன் மாதம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.கடந்த புதன்கிழமை சீனாவில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் அமெரிக்கா மீண்டும் வரியை உயர்த்தி இருக்கிறது. இதை தொடர்ந்து சீனாவுடன் செப்டம்பர் மாதம் தங்கள் நாட்டு அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.