Categories
உலக செய்திகள்

மரண பிடியில் அமெரிக்கா… ஒரேநாளில் 3,176 பேர் கொரோனாவுக்கு பலி: 50 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,176 நோயாளிகள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் உயிரிழப்பிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.

சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களை வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.18 லட்சம் (2,718,699) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை (190,654) 1.90 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 45 ஆயிரத்து 623 ஆக அதிகரித்திருப்பது மன நிம்மதியை தருகிறது. இந்த நிலையில், கொரோனாவால் அதிகம் பாதித்த ஒரு நாடு என சொன்னால் அது அமெரிக்காதான். வைரஸ் தாக்கம் குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, ” நாம் வைரஸால் தாக்கப்பட்டிருக்கிறோம் என பகிரங்கமாக கூறியுள்ளார்.

இது வெறும் நோய்த்தொற்று அல்ல. 1917க்குப் பிறகு யாரும் எப்படியொன்றைக் கண்டதே இல்லை” என கூறியுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவில் இன்று 3,176 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 49,845 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 80 ஆயிரத்து 204 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,922 ஆக உள்ளது. இதையடுத்து, அமெரிக்காவில் உயிரிழப்புகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதேபோல, ஸ்பெயின் நாட்டில் 22,157 பேரும், இத்தாலியில் 25,549 பேரும், பிரான்சில் 21,856 பேரும், பிரிட்டனில் 18,738 பேரும் இதுவரை கொரோனா பிடியில் சிக்கி மடிந்துள்ளனர்.

Categories

Tech |