Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்கா தேர்தல்: ஜார்ஜியாவிலும் முந்தினார் பைடன் …!!

ஜார்ஜியா மாகாணத்திலும் அதிபர் ஜோ பைடனை ட்ரம்ப் முந்தியதால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ஜோ பைடன் அடுத்தடுத்து டொனால்ட் ட்ரம்ப்பிடம் உள்ள ஒவ்வொரு மாநிலமாக கை பற்றிக் கொண்டிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சற்று முன்பு வரை தொடர்ந்து முன்னிலையில் இருந்த ஜார்ஜியா என்ற ஒன்று மாநிலத்திலும் தற்போது முன்னிலை வகித்து வருகின்றார். இன்று காலை இந்திய நேரப்படி இருவரும் சம அளவிலேயே இருந்தார்கள். படிப்படியாக இருவருக்கும் இடையான வாக்கு வித்தியாசமானது குறைந்து கொண்டே வந்தது. தற்போது முழுமையாக ஜோ பைடன் முன்னிலையில் பெற்றுள்ளார்.

இதனால் இப்போது ஜார்ஜியா மாநிலத்தில் இருந்த 16 தேர்தல் சபை வாக்குகள் ஜோ பைடனுக்கு செல்லும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஜோ பைடன் 270 வாக்குகளை பெற்றால் அதிபராக முடியும், அவர் அதிபராக இன்னும் 6 தேர்தல் சபை வாக்குகள் பெற வேண்டிய நிலையில் தற்போது ஜார்ஜியாவில் உள்ள 16 தேர்தல் சபை வாக்கும் அவருக்கு செல்லக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜோ பைடன் அதிபராவது தற்போதைய நிலையில் 100% உறுதியாகியுள்ளது.

Categories

Tech |