Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை வெளியேற்றுவதே உண்மையான பழிவாங்கல் – ஈரான் அதிபர் உறுதி

தெஹ்ரான்: மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதே உண்மையான வெற்றி என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தளங்களின் மீது புதன்கிழமை (ஜனவரி 8) அதிகாலை ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறுகையில், ”  மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்காவை முழுவதும்  வெளியேற்றுவதே எங்கள் உண்மையான வெற்றி” என்றார்.

மேலும், இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது.

1979ஆம் ஆண்டு தெஹ்ரானிலுள்ள அமெரிக்க தூதரகத்தை ஈரான் கைப்பற்றியது. அதன்பின், அமெரிக்கா மீது ஈரான் நடத்தும் நேரடியான தாக்குதல் இதுவாகும். காசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்காவுக்கு எதிராகவும் அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும் ஈரான் மக்கள் கொந்தளிப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ராணுவத் தளங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எவ்வளவு வீரர்கள் பலியானார்கள் என்பது குறித்த தகவல்களை இதுவரை அமெரிக்க வெளியிடவில்லை

Categories

Tech |