அமெரிக்க பணி விசா தடை மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதியாக வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு பணி செய்ய வருபவர்களின் எச்1பி விசா தடை செய்யப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து விசா தடை செய்யப்பட்டது. எச்1பி விசா என்பது இந்தியாவிலிருந்து அல்லது மற்ற நாடுகளில் இருந்து பணிக்காக செல்பவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வசிப்பதற்கான உரிமையாகும். இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பணி செய்பவர்கள் மூலம் அமெரிக்கர்களின் பணி தடைபடுவதாக டிரம்ப் இந்த தடை விதிப்பபை கொண்டு வந்தார்.
இந்நிலையில் இந்த விசா தடைக்கு ஜோ பைடன் பதவி ஏற்றவுடன் தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து பணி விசா தொடர்பான இரண்டாவது தடை உத்தரவுகள் வரும் மார்ச் மாதம் வரை நீட்டித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். எச்1பி விசா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கான பணி விசாக்கள் வழங்கல், கிரீன் கார்டு விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடை உத்தரவு டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வர இருந்த இந்நிலையில் அதை வரும் மார்ச் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.