அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு கிரீன் கார்டு அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
அமெரிக்க நாட்டில் வாழும் இந்தியாவை சேர்ந்தவர்கள் உட்பட மற்ற நாட்டினர், நிரந்தரமாக அங்கு வாழ அளிக்கப்படும் ஆவணம் தான் கிரீன் கார்டு எனப்படுகிறது. இந்த கிரீன் கார்டு மூலம் அமெரிக்க நாட்டில் வாழும் பிற நாட்டை சேர்ந்தவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். எனினும் தற்போதைய காலகட்டத்தில் இந்த கிரீன் கார்டு எளிதில் கிடைப்பதில்லை.
பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் எச்-1பி விசா மற்றும் அதிக காலத்திற்கு விசா வைத்திருப்பவர்கள் கிரீன் கார்டை பெறும் வகையில் நாடாளுமன்ற செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி எம்பிக்கள் கடந்த புதன்கிழமை அன்று சட்ட மசோதா கொண்டு வந்திருக்கிறார்கள்.
அமெரிக்க நாட்டில் குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் வாழ்ந்து வரும் மக்களுக்கு கிரீன் கார்டு கிடைக்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது.