அமெரிக்கா, சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைன் நாட்டிற்கு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேன் நாட்டின் மீது ரஷ்யா 122-ஆவது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரேனில் ரஷ்யா தீவிரமாக போர் நடத்தியதில் தற்போது வரை ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இதில், அமெரிக்கா உக்ரைன் நாட்டிற்கு ஆதரவளித்து வருகிறது. மேலும், அந்நாட்டிற்கு ஆயுத உதவிகளை செய்து வருகிறது.
எனவே, அதிபர் ஜெலன்ஸ்கி, ஆயுத உதவி அளித்ததற்காக அமெரிக்காவிற்கு நன்றி கூறியிருக்கிறார். அமெரிக்கா, உக்ரைனிற்கு 2,000 எந்திர துப்பாக்கிகள், 1,200 கையெறி குண்டு லாஞ்சர்கள், 4 பீரங்கி ராக்கெட் அமைப்புகள் மற்றும் 18 தந்திர உபாய வாகனங்கள் என்று சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஆயுதங்களை வழங்கியுள்ளது.