உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தயாராக இருக்கும் நிலையில் இந்திய தங்களுக்கு துணையாக இருக்கும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.
உக்ரைன் பிரச்சினையில் அதிகாரபூர்வமாக தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி கொண்டிருக்கிறது. ஆனால், போர் உருவாகக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா, எந்த நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் குவாட் அமைப்பின் மாநாடு நடைபெற்றது.
இதில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்தது என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான நெட் பிரைஸ் கூறியிருந்தார். அப்போது, சர்வதேச அமைதியை பின்பற்ற விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது, குவாட் அமைப்பினுடைய அடிப்படை கொள்கை என்று கூறினார். மேலும், போர் ஏற்படும் பட்சத்தில் இந்தியா, அமெரிக்காவிற்கு தான் துணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.